அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்)

1. NCGIL என்றால் என்ன?

தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் லிமிடெட் (NCGIL) என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் 13 நிதி நிறுவனங்களுக்கும் இடையில் பொது தனியார் கூட்டாண்மை ஒன்றாகக் கூட்டிணைக்கப்பட்ட பொதுக் கம்பனியாகும். இது நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் (MSMEs) காசுப் பாய்ச்சல்களின் அடிப்படையில் பிணையுறுதியளிக்கப்படாத கடன்களை ஊக்குவிப்பதற்காக பங்குதாரர் நிதி நிறுவனங்களுக்கு (Shareholding Financial Institution -SFI) பகுதி கடன் உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் MSMEs நிதியை சிறப்பாக அணுகுவதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

2. NCGIL கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் பெற யார் தகுதியுடையவர்கள்?

இலங்கையிலுள்ள எந்தவொரு வணிகமும், வணிக நிதி ரீதியாக சாத்தியமானதாகவும், பங்குதாரர் நிதி நிறுவனத்துக்கு கடனை எந்த சிரமமும் இல்லாமல் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டதாகவும் இருந்தால், எந்தவொரு பங்குதாரர் நிதி நிறுவனங்களிடமிருந்தும் (வங்கிகள் / நிதி நிறுவனங்கள்) கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையது.

3. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கடன் அளவு என்ன?

Minimum loan size is LKR 500,000 and the maximum loan size is LKR 25Mn

4. NCGIL ஆனது கடனின் முழுத் தொகைக்கும் உத்தரவாதம் அளிக்குமா?

இல்லை, பங்குதாரர் நிதி நிறுவனம் வழங்கும் கடனில் 67% (2/3) வரை மட்டுமே NCGIL உத்தரவாதம் அளிக்கிறது.

5. வங்கி வட்டிக்கு கூடுதலாக நாம் கமிஷன் செலுத்த வேண்டுமா?

ஆம், NCGIL ஆனது வருடாந்த அடிப்படையில் அனர்தத்திற்கு ஏற்ப 1%-2% அனர்த்த தவணைக் கட்டணத்தை வசூலிக்கும். தவணைக் கடன் தொகையில் அல்ல, ஆனால் உத்தரவாதமான தொகையில் கணக்கிடப்படுகிறது. தவணைக் கட்டணம் MSMEs இனால் செலுத்தப்படுதல் வேண்டும்.

6. இந்தத் திட்டத்தின் கீழ் எந்த வகையான வங்கி வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன?

மூலதனச் செலவினங்களுக்காக வழங்கப்படும் தவணைகளில் செலுத்தப்படும் காலக் கடன்கள் (அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள்) மற்றும் நிரந்தர பணி மூலதனம் (அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்) மட்டுமே உத்தரவாதக் காப்பீட்டிற்குத் தகுதியானவை. இந்த இரண்டு வகை தவணைக் கடன்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான திருப்பிச் செலுத்தும் காலம் இருக்க வேண்டும்.

7. எந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் NCGIL உடன் கூட்டு சேர்ந்துள்ளன?

NCGIL உடன் கூட்டு சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் உள்ளன, விவரங்களுக்கு "பங்காளர்கள் /பங்குடமையாளர்கள்" என்பதைப் பார்க்கவும்.

8. NCGIL நேரடியாக கடன்களை வழங்குகிறதா?

இல்லை, பங்குதாரர் நிதி நிறுவனங்களால் MSME களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதுடன், NCGIL ஆனது நிதி நிறுவனங்களுக்கு அனர்தத்தைத் தணிக்கும் நிவாரணமாக உத்தரவாதக் காப்பீட்டை மட்டுமே வழங்கும்.

9. NCGIL இனை அணுக எங்களுக்கு வாய்ப்பு உள்ளதா?

ஆம், "எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்பதன் கீழுள்ள எந்த அலுவலருடனும் நீங்கள் பேசலாம்.